Posts

எனது மகன் சுஜன்

பட்டாசும் எனது மகன்களும் பொதுவாக தாங்கள் கண்டதை விளையாட்டாக விளையாடுவதை வழக்கம் உள்ளவர்கள் எனது மகன்கள் சுஜன் மற்றும் ரோஹித் தும். முடி வெட்டிகொண்ட பின் அந்த அண்ணன் எப்படி வெட்டானாரோ அது போலவே ஒருவர் முடி வெட்டும் அண்ணன் போலவும் ஒருவர் வாடிக்கையாளர் போலவும் பாவனை செய்து விளையாடி மகிழ்வர். இந்த தீபாவளியன்று பட்டாசு வெடித்தோம். எனது மகன்கள் கம்பி மத்தாம்பு சங்கு சக்கரம், புஸ்வானம் என்ற ஏனைய பட்டாசுகளை வெடித்தனர்‌. சங்கு சக்கரத்தையும் புஷ்வானத்தையும் மிகவும் ரசித்தபின் வீட்டுக்கு வந்தவுடன் அண்ணன் சுஜன் சொல்கிறார் "நான் சங்கு சக்கரம் நீ கம்பி மத்தாப்பு, என்னை சுற்றவிடு என்று..." தம்பி ரோஹித்தும் அவ்வாரோ செய்து விளையாடினார்.  எனது மனைவி ஷாலினிக்கும் எனக்கும் வியப்பு.   தான் ரசித்த பட்டாசுக்கு உடல், உயிர் மற்றும் உணர்வு கொடுத்து கொண்டாடிய எனது மகன்கள் எனக்கு காவியமாக தெரிகிறார்கள்.